இண்டிகோ விமானத்தில் புறா... வைரல் வீடியோ!
பறக்கத் தயாரான இண்டிகோ விமானத்துக்குள் புறா நுழைந்த காணொலி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பெங்களூருவில் இருந்து வதோதராவுக்கு புறப்படவிருந்த விமானத்தில், புறாவைப் பிடிக்க முயற்சிக்கும் விமான ஊழியர்கள் மற்றும் பயணிகள் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளன. இந்த விடியோவை விமானத்தில் பயணித்த பயணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘சிறப்பு விருந்தினர்’ என குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார்.
இதன் பின்னணி, இண்டிகோ நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான விமானங்கள் கடந்த ஒரு வாரமாக ரத்து செய்யப்பட்டு வருவது காரணமாக, பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். விமான சேவைகள் பாதிக்கப்பட்டது, விமானிகளின் பணி நேர கட்டுப்பாடு விதிகள் (FTL) மத்திய அரசு அமல்படுத்திய பின்னணியில் விமான சேவைகளை சீா்செய்ய டிஜிசிஏ அவசர நடவடிக்கை எடுத்து உள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் ரத்து மற்றும் தாமதங்களால் பயணிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக சுமார் ரூ. 610 கோடி பயணச்சீட்டுக்கான பணத்தை இண்டிகோ நிறுவனம் திருப்பி வழங்கியுள்ளது. இணையத்தில் வைரலாகும் புறா காணொலி, இண்டிகோ நிறுவனத்திற்கு சோதனை காலமாகிவிட்டது என்று பயணிகள் மற்றும் சமூக வலைத்தளக் கருத்துகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
