பினராயி விஜயன் தமிழில் பொங்கல் வாழ்த்து!

 
பினராயி விஜயன்
 

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழா இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், தமிழக மக்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பினராயி விஜயன்

அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், உழைப்பின் மகத்துவத்தையும் இயற்கையின் கொடையையும் போற்றும் திருவிழாவே பொங்கல் என குறிப்பிட்டுள்ளார். இந்த அறுவடைப் பண்டிகை அனைவரின் வாழ்விலும் புதிய ஒளியை ஏற்ற வேண்டும் என்றும், மக்களிடையே மகிழ்ச்சி மற்றும் நல்லிணக்கம் அதிகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பினராயி விஜயன்

மேலும், சமத்துவமும் நீதியும் நிலைபெற்றால்தான் ஒரு சமூகம் வளர்ச்சி அடையும் என பினராயி விஜயன் கூறியுள்ளார். சாதி, மத பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், இந்த பொங்கல் அனைவருக்கும் நல்வாழ்வு தர வேண்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!