நாளை முதல் வலம் வரப்போகும் பிங்க் நிற ஆட்டோ... முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்!

சென்னையில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் விதமாகவும் அரசு மானியமாக தலா ரூ. 1 லட்சம் வீதம் 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் வழங்கி, ரூ.2 கோடி செலவில் 200 பிங்க் ஆட்டோ திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்திருந்தார்.
இத்திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்க, பெண் ஓட்டுநர்கள் மூலம் 250 ஆட்டோக்கள் சென்னை மாநகரில் இயக்கப்பட உள்ளன.
இந்நிலையில் சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் இந்த பிங்க் ஆட்டோ திட்டம் வரும் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நாளை மார்ச் 8ம் தேதி பிங்க் ஆட்டோ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!