பரிதாபம்... இன்னும் 10 நாட்களில் படிப்பு முடியுது... இந்திய மாணவர் அமெரிக்காவில் சுட்டுக் கொலை!

 
சாயிஷ்

உலகம் முழுவதுமே வன்முறை செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவில் பெட்ரோல் நிலையம் ஒன்றில் கொள்ளையடிக்க வந்த  கும்பலைத் தடுக்க முயன்ற இந்திய மாணவர் சாயிஷ் வீரா துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆந்திராவைச் சேர்ந்த சாயிஷ் வீரா, அந்த பெட்ரோல் நிலையத்தில் கல்லூரி படிப்பு நேர போக, மீதி நேரத்தில் பகுதி நேர ஊழியராக பணிபுரிந்த வந்த நிலையில், இந்த சம்பவம் நடைப்பெற்றுள்ளது. 

அமெரிக்காவின் மேற்கு கொலம்பஸ் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில், இந்திய மாணவர் சாயிஷ், பகுதி நேர ஊழியராக பணியாற்றிக் கொண்டே, கல்லூரியில் முதுகலைப் படிப்பு படித்து வந்துள்ளார். உயிரிழந்த சாயிஷ் வீராவுக்கு வயது 24. இத்தனைக்கும் கொள்ளையடிக்க முயற்சிக்கப்பட்ட பெட்ரோல் நிலையில், கொலம்பஸ் காவல் நிலையத்தின் அருகிலேயே அமைந்துள்ளது. 

கடந்த ஏப்ரல் 20ம் தேதி, நள்ளிரவு 12.50 மணியளவில், சாயிஷ் வேலைப் பார்த்து வரும் பெட்ரோல் பங்கில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. துப்பாக்கி சத்தம் கேட்டு, அருகில் இருந்த காவல் நிலையத்தில் இருந்து சம்பவ இடத்துக்கு போலீசார் உடனடியாக சென்று பார்த்த போது, சாயிஷ் வீரா சுடப்பட்ட நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

USA

உடனடியாக தகவலறிந்து கொலம்பஸ் தீயணைப்பு ஊழியர்கள் சாயிஷை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் பிற்பகல் 1.27 மணிக்கு சாயிஷ் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, போலீசார் விசாரணைக்கு பின்னர், உயிரிழந்தவரின் அடையாளத்தை உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேக நபரின் புகைப்படத்தையும் போலீசார் வெளியிட்டனர்.

சாயிஷ் வீராவின் உடலை இந்தியாவுக்கு அனுப்பும் பணி ஆன்லைன் நிதி சேகரிப்பை மேற்பார்வையிடும் ரோஹித் யலமஞ்சிலி தலைமையில் தொடங்கப்பட்டுள்ளது. சாயிஷ் தனது முதுகலை பட்டம் பெற இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் இந்த சோகமான சம்பவம் நடந்ததாகவும், அந்த இளைஞன் எச்1பி விசாவிற்கு பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் ரோஹித் கூறினார். 

USA

இரண்டு வாரங்களுக்குள் சாயிஷ் வீரா பெட்ரோல் நிலைய எழுத்தர் வேலையை விட்டுவிட முடிவு செய்ததாகவும் நண்பர்கள் தெரிவித்தனர். அவரது குடும்பத்தில் படிப்பிற்காக அமெரிக்கா சென்ற முதல் நபர் வீரா என்று கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தந்தையின் மரணத்தால் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கலிலிருந்து தனது குடும்பத்தைக் காப்பாற்ற அந்த இளைஞன் அமெரிக்கா வந்தான். சாயிஷ் கொலம்பஸ் பகுதியில் சிறந்த கிரிக்கெட் வீரராகவும் இருந்ததாக நண்பர்கள் மேலும் தெரிவித்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web