பியூஷ் கோயல் சென்னை வருகை!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளன. அந்த வகையில், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் செவ்வாய்க்கிழமை சென்னை வருகிறார். அவரது வருகையையொட்டி பாஜக மையக் குழு கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர்கள் ஹெச்.ராஜா, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். தேர்தல் வியூகம், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு ஆகியவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. வரவிருக்கும் தேர்தலுக்கான பிரசார திட்டங்களும் விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்களை பியூஷ் கோயல் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை இந்த சந்திப்பில் முக்கிய இடம் பெறும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. தமிழக அரசியலில் இந்த சந்திப்பு முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
