2026 தேர்தல் ... இபிஎஸ் வீட்டில் பியூஷ் கோயலுக்கு சந்திப்பு… !

 
இபிஎஸ்

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு தமிழக அரசியல் களத்தில் முக்கிய நகர்வுகள் தொடங்கியுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இடையே சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொகுதி பங்கீடு, கூட்டணி உத்திகள், தேர்தல் தயாரிப்பு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இபிஎஸ்

சென்னை பசுமைவழிச்சாலை இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, இபிஎஸ் பாஜக தலைவர்களுக்கு சிறப்பு விருந்து அளித்தார். பியூஷ் கோயல் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர். இந்த விருந்து கூட்டணிக்குள் நெருக்கம் அதிகரித்துள்ளதைக் காட்டுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காஞ்சிபுரத்தில் வடிவமைப்பு வள மையத்தை மத்திய அமைச்சர்  பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்

திமுகவுக்கு எதிராக வலுவான எதிர்க்கட்சியாக உருவாக அதிமுக–பாஜக கூட்டணி முயற்சி எடுத்து வருகிறது. பாஜக தரப்பில் அதிக தொகுதிகள் கோரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை தமிழக அரசியலில் புதிய சமன்பாட்டை உருவாக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வரும் நாட்களில் கூட்டணி தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என அரசியல் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!