டிசம்பர் 23ம் தேதி பியூஷ் கோயல் தமிழகம் வருகை!

 
பியூஸ்கோயல்

 

தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம், கேரளா ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக தீவிர ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தேர்தல் யுக்திகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து தமிழகத்துக்கான தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். இணை பொறுப்பாளர்களாக சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் அர்ஜூன்ராம் மெக்வால், சிவில் விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் முரளிதர் மொகல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயல் வருகிற 23-ம் தேதி தமிழகம் வர உள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நயினார் நாகேந்திரன்

பாஜக உயர்மட்ட குழு ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது பரப்புரை பயணம் ஜனவரி 9-ம் தேதி நிறைவு பெறும் என்றும், அந்த நிறைவு கூட்டத்திற்கு பிரதமர் மோடி அல்லது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருவார்கள் என்றும் கூறினார். நாளையே தேர்தல் வந்தாலும் பாஜக தயாராக இருப்பதாகவும், 5 ஆண்டு திமுக ஆட்சியில் சொத்து வரி, மின் கட்டணம் உயர்ந்துள்ளதாகவும், பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!