வங்கிப் பணிகளை திட்டமிட்டுக்கோங்க!! ஜூன் மாதத்தில் 12 நாட்கள் வங்கி விடுமுறை !!

மே மாதம் முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ளன. ஜூன் மாதத்தில் பள்ளி, கல்லூரி திறப்பு, வழக்கமான நடைமுறை, பள்ளி, கல்லூரி கட்டணம், யூனிபார்ம், விடுதிக்கட்டணம், மாதாந்திர பட்ஜெட் என இல்லத்தரசிகள் விழிபிதுங்கியுள்ளனர். இந்நிலையில் அடுத்தமாதம் வங்கி விடுமுறை தினங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்பது குறித்த அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் முன்கூட்டியே அறிவித்து வருகிறது.
இதனை பொறுத்து வங்கிப் பணிகளை வாடிக்கையாளர்கள் திட்டமிட்டு கொள்ளும் வகையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. பொதுவாகவே வங்கிகளுக்கு வார இறுதி நாட்களான ஞாயிற்றுக்கிழமை மற்றும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை, அரசு விடுமுறை நாட்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த வகையில் மே மாதத்தில் மட்டுமே மொத்தமாக 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதன்படி ஜூன் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் வார இறுதி நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களையும் சேர்த்து 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வங்கி விடுமுறை நாட்கள் பட்டியல் இதோ:
ஜூன் 4, 2023- ஞாயிற்றுக்கிழமை
ஜூன் 10, 2023 -இரண்டாவது சனிக்கிழமை
ஜூன் 11, 2023 - ஞாயிற்றுக்கிழமை
ஜூன் 15 , 2023- ராஜ சக்ராந்தி (மிசோரம் மற்றும் ஒடிசா ) வங்கிகளுக்கு விடுமுறை
ஜூன் 18, 2023- ஞாயிற்றுக்கிழமை
ஜூன் 20, 2023- ரத யாத்திரை (ஒடிசா மற்றும் மணிப்பூர் )வங்கிகளுக்கு விடுமுறை
ஜூன் 24, 2023- நான்காவது சனிக்கிழமை
ஜூன் 25, 2023- ஞாயிற்றுக்கிழமை
ஜூன் 26, 2023- கர்ச்சி பூஜை ( திரிபுரா)
ஜூன் 28, 2023- ஈத் உல்-அஷா (மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர் மற்றும் கேரளா)
ஜூன் 29, 2023- ஈத் அல்-அதா நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை
ஜூன் 30, 2023- ரீமா ஈத் உல் அஷா நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!