வங்கிப் பணிகளை திட்டமிட்டுக்கோங்க!! மார்ச் மாசத்துல 12 நாட்கள் வங்கி விடுமுறை!!

 
வங்கி விடுமுறை

பிப்ரவரி மாதம் நாளையுடன்  முடிவடைகிறது.  மார்ச் மாதம் தான் வங்கி கணக்கு முடிவடையும் மாதம் . இதனால் வங்கிப் பணிகளை திட்டமிட்டு கொள்ளும் வகையில் மார்ச் மாதத்திற்கான விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும்  பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்பட்டு வருகிறது.

வங்கி

இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கான விடுமுறை நாட்கள் குறித்த பட்டியலும் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டு வருகிறது.  இந்த விடுமுறை நாட்கள் இந்தியா முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள்  என  அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும். இவை தவிர உள்ளூர் பண்டிகைகள், திருவிழாக்களை பொருத்து குறிப்பிட்ட மாநிலங்களில் விடுமுறை அறிவிக்கப்படுவதும் உண்டு.

அதே நேரத்தில்  2வது மற்றும் 4வது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் விடுமுறை என்பது இந்தியாவில் முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும். அந்த வகையில் தற்போது மார்ச் மாதத்திற்கான விடுமுறை பட்டியல் குறித்த அறிவிப்பை RBI வெளியிட்டுள்ளது.அதன்படி மார்ச் மாதத்தில் மொத்தமாக 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதனை பொறுத்து வங்கி பணிகளை திட்டமிட்டு கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மார்ச் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள்:

டிசம்பரில் 16 நாட்கள் விடுமுறை!! வங்கி வேலைகளை ப்ளான் பண்ணிக்கோங்க!!
மார்ச் 3 வெள்ளிக்கிழமை -  சாப்சார் குட்
மார்ச் 5-  ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 7- செவ்வாய்கிழமை -ஹோலி பண்டிகை
மார்ச் 8 புதன் கிழமை -  ஹோலி பண்டிகை 
மார்ச் 9 -  வியாழக்கிழமை  - ஹோலி பண்டிகை
மார்ச் 11-  இரண்டாவது சனிக்கிழமை
மார்ச் 12-  ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 19- ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 22- புதன்கிழமை - யுகாதி விழா, பீகார் திவாஸ் மற்றும் தெலுங்கு புத்தாண்டு தினம்
மார்ச் 25- 4வது சனிக்கிழமை
மார்ச் 26- ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 30-வியாழக்கிழமை - ஸ்ரீராம நவமி
இந்த விடுமுறை பட்டியலின் அடிப்படையில் உங்களது வங்கி பணிகளை திட்டமிட்டுக்கோங்க மக்களே!.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web