குஜராத் விமான விபத்து ஆழ்ந்த அதிர்ச்சி... தமிழக முதல்வர் ஸ்டாலின் !

 
குஜராத் விமான விபத்து ஆழ்ந்த அதிர்ச்சி... தமிழக முதல்வர் ஸ்டாலின் !   

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானம்  ஏஐ171 புறப்பட்ட சில நிமிடங்களில் குடியிருப்பு பகுதிகளின் மேலே விழுந்து  தீப்பற்றி எரிந்தது.விண்ணை முட்டும் அளவுக்கு அந்த பகுதியில் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. இந்த கோர விமான விபத்தில்  168 இந்தியர்கள், 53 பிரிட்டன் நாட்டவர்கள், 2 விமானிகள், 10 விமான ஊழியர்கள் என 242 பேர் பயணித்துள்ளனர்.
விமான நிலையத்திற்கு அருகே மேதானி நகர் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்துள்ளதால் குடியிருப்புப் பகுதிகளில் உள்ளவர்களும் பாதிக்கப்பட்டு இருப்பதாக  கூறப்படுகிறது. இதுவரை 133 பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர் பிழைத்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

விமானம் விபத்து
குறிப்பாக, குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி இந்த விமானத்தில் பயணித்து வந்தது குறிப்பிடத்தக்கது. விபத்தின் போது விமானம் ஒரு மரத்தில் மோதியதாக ஆரம்பகட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மீட்பு குழுவினர் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக மொத்தம் 40 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியது.  இதைத்தொடர்ந்து பலி எண்ணிக்கை தற்போது 133 ஆக உயர்ந்துள்ளது.

கோர விமான விபத்து... மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  குஜராத் விரைகிறார்!  
இதுகுறித்து முதல்வர்  ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.  அகமதாபாத்தில் 242 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் AI171 விபத்துக்குள்ளானதில் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்தேன். பாதிக்கப்பட்ட அனைவருடனும், விமானத்தில் இருந்தவர்களின் குடும்பத்தினருடனும் எனது எண்ணங்கள் உள்ளன. மீட்பு மற்றும் நிவாரணத்திற்காக அனைத்து சாத்தியமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என நம்புகிறேன் எனம் கூறியிருந்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது