துணை முதல்வர் அஜித் பவார் சென்ற விமான விபத்தில் நடந்தது என்ன?

 
சரத்பவார்

துணை முதலமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார் அணி) தலைவருமான அஜித் பவார் இன்று காலை விமான விபத்தில் உயிரிழந்தார். மும்பையில் இருந்து பாராமதிக்கு புறப்பட்ட சிறிய ரக சார்ட்டர் விமானம், பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்து மோதி தீப்பற்றி எரிந்தது.

இந்த கோர விபத்தில் அஜித் பவாருடன் பயணித்த நான்கு பயணிகள் மற்றும் இரண்டு பைலட்டுகள் என மொத்தம் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காலை 8 மணிக்கு மும்பையில் இருந்து புறப்பட்ட Learjet 45 ரக விமானம் காலை 9.12 மணியளவில் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

விபத்து நடந்ததும் தீயணைப்புப் படையினர் மற்றும் மீட்புக் குழுக்கள் விரைந்து சென்றனர். விமானம் முழுமையாக எரிந்து நொறுங்கியதால் மீட்பு பணிகளில் சிரமம் ஏற்பட்டது. அஜித் பவாரின் மறைவு மகாராஷ்டிரா அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து DGCA உள்ளிட்ட மத்திய அமைப்புகள் விசாரணை தொடங்கியுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!