விமானம் வாகனங்கள் மீது மோதி கோர விபத்து... 15 பேர் உடல் சிதறி பலி... சாலைகளில் பறந்த கரன்சி நோட்டுக்கள்... பகீர் வீடியோ!
பொலிவியா நாட்டில் ராணுவ சரக்கு விமானம் ஒன்று பயங்கர விபத்தில் சிக்கியது. தலைநகர் La Paz அருகே உள்ள El Alto விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்தது. பறக்கும் பாதையில் இருந்து விலகிய விமானம் அருகிலுள்ள சாலையில் சென்ற வாகனங்கள் மீது மோதி நொறுங்கியது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்ததாகவும், 30 பேர் கடுமையாக காயமடைந்ததாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து ஏற்பட்ட உடனேயே விமானத்தில் இருந்த பொலிவியன் பொலிவியானோ கரன்சி நோட்டுகள் சிதறி சாலை முழுவதும் பறந்தன. இதைக் கண்ட பொதுமக்கள் பலர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பணத்தை அள்ளிச் சென்றதாக கூறப்படுகிறது. சிலர் காயமடைந்தவர்களுக்கு உதவ முயன்றதாகவும், ஆனால் பெரும்பாலானோர் பணத்தை சேகரிப்பதில் ஈடுபட்டதாகவும் கண்கண்ட சாட்சிகள் தெரிவித்துள்ளனர். இந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ராணுவ வீரர்கள் மற்றும் விமான குழு உறுப்பினர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் சாலையில் சென்ற வாகன ஓட்டுநர்களும் அடங்குவர். பொலிவிய ராணுவம் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொண்டது. விமானத்தில் ஏன் பெரிய அளவில் பணம் ஏற்றப்பட்டிருந்தது என்பது குறித்து இதுவரை தெளிவான விளக்கம் வெளியாகவில்லை. விபத்து காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
