நெடுஞ்சாலையில் அவசர அவசரமாக தரையிறக்கம்… காரை மோதிய விமானம்!

 
விமானம்
 

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் பிரேவர்டு நகரை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் நேற்று இரவு சிறிய ரக விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர். நடுவானில் பறந்துகொண்டிருந்த போது விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானி அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக விமானத்தை பிரேவர்டு நகரின் நெடுஞ்சாலையில் அவசரமாக தரையிறக்கினார். அப்போது சாலையில் சென்ற காரின் மீது விமானம் மோதியது. காரை ஓட்டி வந்த 57 வயது பெண்ணுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

விமானத்தில் பயணித்த இருவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!