ப்ளீஸ் மன்னிச்சிடுங்க... மகன் வீடியோக்களை நீக்க சொல்லி மிரட்டலால் உருவான சர்ச்சை?

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா. இவர் தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்கும்படி மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த புகாரை அடுத்து நடிகர் விஜய் சேதுபதி மன்னிப்பு கோரியுள்ளார். “எங்கள் தரப்பில் இருந்து யாருக்கேனும் அழைப்பு வந்து, மிரட்டல் நடந்திருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்,” என பேட்டி அளித்துள்ளார்.
இச்சம்பவம், சூர்யாவின் முதல் படத்தின் விளம்பர நடவடிக்கைகளைச் சுற்றி எழுந்த சர்ச்சையால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் நடித்துள்ள பீனிக்ஸ் படத்தின் விளம்பரங்களைப் பொறுத்தவரை, சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்கள் சிலரால் விமர்சிக்கப்பட்டன. இதனால் சூர்யா தரப்பு சிலரை அழைத்து அந்த வீடியோக்களை நீக்கச் சொல்லி மிரட்டல் விடுத்து வருவதாகவும் புகார் எழுந்தது.
சமீபத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவிற்கு பிறகு சிலருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும்போது விஜய் சேதுபதி மகன் கொடுத்த செய்கைகள் பல படங்களில் நடித்த நடிகர்கள் போல் உணர்வதாக விமர்சனங்கள் எழுந்தன.
முன்னதாக படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது அப்பா வேற நான் வேற என சூர்யா விஜய் சேதுபதி பேசியது ஒரு பக்கம் விமர்சனமும் ஆனது. அந்த விமர்சனங்களால் மனமுடைந்த சூர்யா விஜய் சேதுபதி நான் பேசியது தவறு தான் என அடுத்ததாக வருத்தமும் தெரிவித்தார். இருப்பினும் அவர் மீது எழுந்த விமர்சனங்கள் மற்றும் நிற்கவில்லை.
அந்த சர்ச்சையை தொடர்ந்து மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது இந்த சம்பவத்தை அமைதியாக கையாள முயன்று, பொதுமக்கள் மற்றும் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு, பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர முயற்சித்தார். சூர்யா சேதுபதி நடித்துள்ள இந்த படம் ஜூலை 4ம் தேதி ரிலீஸ் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!