ப்ளீஸ்... ஈரான் இஸ்ரேல் போரில் அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க .... ஐ.நா. பொதுச்செயலாளர் வேண்டுகோள்!

ஈரான் இஸ்ரேல் போர் நாளுக்கு நாள் பதற்றத்தை உலக நாடுகளிடையே அதிகரித்து வருகிறது. இன்று அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களும் ஏற்பட்டுள்ளன. ஈரான் அணுஆயுத சோதனை நடத்துகிறதா எனவும் கேள்விகள் எழுந்துள்ளன. இந்நிலையில் ஐநா பொது செயலாளர் குட்டெரெஸ் “அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அணு ஆயுதம் விவகாரம் தொடர்பாக ஈரானை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரில் அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியுள்ளார்.
இது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இஸ்ரேல் – ஈரான் போர் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் ”இரு நாடுகளுக்கு இடையேயான போர் என்பது யாராலும் கட்டுப்படுத்த முடியாத தீயைப் பற்ற வைக்கும். அதை நாம் பரவ விடக்கூடாது. அமைதியை ஏற்படுத்த ஒரு வாய்ப்பு கொடுங்கள்.
போர் பதட்டத்தை உடனடியாக குறைக்க வேண்டும். போரை நிறுத்துவது அந்தந்த நாடுகளின் தலைவிதியை மட்டுமல்ல, ஒட்டுமொத்த எதிர்காலத்தின் தலைவிதியை மாற்ற உதவும். போர் மேலும் மேலும் அதிகமாக நாம் அனுமதிக்கக் கூடாது. இந்த மோதல் கணிக்க முடியாததாக உள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்குள் ஒற்றுமை மற்றும் ஐ.நா. சாசனத்தை பின்பற்ற வேண்டும் ” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!