அரசு பள்ளி விடுதியில் பிளஸ் 1 மாணவர் தூக்கிட்டு தற்கொலை... மர்ம மரணம் என உறவினர்கள் சாலை மறியல்!
ஈரோடு மாவட்டத்தில் அரசு மாதிரி பள்ளி விடுதி அறையில் பிளஸ் ஒன் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக தகவல் வெளியான நிலையில், மர்ம மரணம் என உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகிரியைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளி முருகேஷ் என்பவரின் மகன் சஞ்சய், பெருந்துறை அரசு மாதிரி பள்ளியில் தங்கிப் படித்து வந்த நிலையில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
சஞ்சய் மற்றும் அவரது இரட்டைச் சகோதரர் சந்தோஷ் ஆகிய இருவரும் ஈரோடு மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று வழக்கம்போல வகுப்புக்குச் சென்ற சஞ்சய், இடைவேளை நேரத்தில், தான் மட்டும் தனியாக விடுதிக்குச் சென்றுள்ளார். அங்கு மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சக மாணவர் ஒருவரே இதனை முதலில் பார்த்து பள்ளி அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

பள்ளிப் பாடங்களைச் சுமையாகக் கருதியதும், தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் ஏற்பட்ட மன உளைச்சலுமே தற்கொலைக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. தன்னை வேறு பள்ளிக்கு மாற்றுமாறு அவர் ஏற்கனவே பெற்றோரிடம் கேட்டு வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, சஞ்சய்யின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாக திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலைந்து செல்லாததால், போலீசார் அவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
சஞ்சய்யின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் வரை உடலைப் பெறப்போவதில்லை என உறவினர்கள் பிடிவாதமாக உள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
