சஸ்பெண்ட்!! பொதுத்தேர்வில் காப்பி அடிக்க உதவிய 5 ஆசிரியர்கள்!!

 
மாணவர்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. அந்த வகையில் நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே சாம்ராஜ் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியிலும் கடந்த 27ஆம் தேதி பிளஸ் 2 கணித தேர்வு நடந்தது. இதில் ஏராளமான மாணவர்கள் தேர்வை எழுத்தினர். 

அப்போது, ஒரு சில மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விடை எழுத உதவியதாக புகார் எழுந்தது. அதாவது பிளஸ் 2 கணித தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்க ஆசிரியர்கள் உதவியதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வுசெய்தனர். 

மாணவர்

இது குறித்து நீலகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனியசாமி தலைமையிலான அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது மாணவர்கள் காப்பி அடிக்க ஆசிரியர்கள் உதவியது தெரியவந்தது. 

மாணவர்

முதன்மைக் கல்வி அலுவலர் முனியசாமி கூறுகையில், 'கணித தேர்வில் ஆசிரியர்கள் சிலர் மாணவர்களுக்கு உதவியுள்ளனர். இதில் தொடர்புடைய முதன்மை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், துறை அலுவலர் செந்தில், வழித்தட அலுவலர் சீனிவாசன், அறை கண்காணிப்பாளர்கள் ராம்கி, மூர்த்தி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர், என்றார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web