பிளஸ்-2 மாணவிக்குப் பாலியல் தொல்லை... அரசு பள்ளி ஆசிரியர் கைது!

 
பாலியல்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த ஒருவர், தன்னுடைய டியூஷன் சென்டருக்கு வந்த பிளஸ்-2 மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்துள்ளது. மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அந்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கற்பழிப்பு பலாத்காரம் செக்ஸ் பாலியல் பெண்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உமையாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (35). இவர் பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருவதுடன், கபிஸ்தலத்தில் ஒரு டியூஷன் சென்டரும் நடத்தி வந்துள்ளார்.

கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி அன்று, தன்னுடைய டியூஷனுக்கு வந்த பிளஸ்-2 மாணவி ஒருவரிடம் ஆசிரியர் முருகன் ஆபாசமாகப் பேசியுள்ளார். மேலும், அந்த மாணவியின் கையைப் பிடித்து இழுத்து, தன்னுடைய மோட்டார் சைக்கிளில் ஏறுமாறு மிரட்டி, பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

சிறுமிக்கு பாலியல் சீண்டல்

இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் பாபநாசம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து, அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷா, ஆசிரியர் முருகனிடம் தீவிர விசாரணை நடத்தினார். விசாரணையில், அவர் மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, ஆசிரியர் முருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, உடனடியாகக் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!