"சிவகங்கை விபத்து வருத்தமளிக்கிறது" - பிரதமர் மோடி இரங்கல்.. ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

 
மோடி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே இரு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிசம்பர் 1, 2025) தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.


இந்த விபத்துச் சம்பவம் குறித்துப் பிரதமர் மோடி தனது 'X' (முன்னர் ட்விட்டர்) தளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்: அதில், சிவகங்கை விபத்து சம்பவம் வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்." விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சம் நிதி உதவியும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 நிதி உதவியும் ஒன்றிய அரசு சார்பில் வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.

சிவகங்கை விபத்து

சிவகங்கையில் நடந்த இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்ததுடன், 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும், 13 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து நடக்கும் சாலை விபத்துகள் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!