மே 24ல் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்... டெல்லி செல்கிறார் ஸ்டாலின்!
மே 24ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. நிதி ஆயோக் அமைப்பு புதிய திட்ட குழுவுக்கு பதிலாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்குதலுக்கு பிறகு நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. அனைத்து மாநில முதல்வர்களுக்கும் இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும்.

இந்நிலையில் மாநிலத் திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு குறித்து மாநில முதல்வர்கள் மத்திய அரசுக்கு எடுத்துரைப்பார்கள். தமிழகத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை எனக் கூறி 2024ல் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணித்துள்ளார்.

இந்நிலையில் நடப்பு ஆண்டிற்கான நிதி ஆயோக் கூட்டம் மே 24ம் தேதி டெல்லியில் நடைபெறும் நிலையில் இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மே 23ம் தேதி இரவு அவர் டெல்லிக்கு செல்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
