அயோத்தி ராமர் கோவில் கோபுரத்தில் இன்று காவிக்கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

 
அயோத்தி ராமர்

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் முடிவடைந்ததைக் குறிக்கும் வகையில், இன்று கோவிலின் கோபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி காவிக் கொடியை ஏற்றி வைத்துப் பேச உள்ளார்.

பிரதமர் மோடி இன்று அயோத்திக்குச் செல்கிறார். காலை 10 மணியளவில், அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள மஹரிஷி வசிஷ்டர், விஸ்வாமித்திரர், அகத்தியர், வால்மீகி, தேவி அஹில்யா, நிஷாத்ராஜ் குகன், அன்னை சபரி ஆகியோருக்காக அமைக்கப்பட்ட ஏழு கோவில்களுக்குச் சென்று அவர் தரிசனம் செய்கிறார். இதன் தொடர்ச்சியாக, சேஷாவதார் கோவிலுக்கும் சென்று அவர் தரிசனம் செய்கிறார்.

அயோத்தி ராமர்

இதையடுத்து, காலை 11 மணியளவில் அன்னை அன்னபூர்ணா தேவி கோவிலுக்குச் செல்லும் பிரதமர், அங்கு ராம்தர்பார் கர்ப்பக்கிரஹத்தில் தரிசனம் செய்து பூஜையில் ஈடுபடுகிறார். அதனைத் தொடர்ந்து குழந்தை ராமர் கர்ப்பக்கிரகத்திலும் அவர் தரிசனம் செய்ய உள்ளார்.

நண்பகல் 12 மணியளவில், அயோத்தியில் உள்ள புனிதமான ஸ்ரீ ராம ஜன்மபூமி கோவிலின் சிகரத்தில் பிரதமர் மோடி சம்பிரதாய ரீதியாகக் காவிக் கொடியை ஏற்றி வைக்கிறார். சுமார் 10 அடி உயரமும், 20 அடி நீளமும் கொண்ட முக்கோண வடிவ இந்தக் கொடியில், ராமரின் வீரத்தையும், அறிவுக்கூர்மையையும் சித்தரிக்கும் வகையில் சூரியன் படமும், ஓம் என்ற எழுத்தும் பொறிக்கப்பட்டு இருக்கும்.

அயோத்தி

கோயிலின் கட்டுமானம் நிறைவடைவதையும், கலாச்சார கொண்டாட்டம் மற்றும் தேசிய ஒற்றுமையின் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதையும் குறிக்கும் வகையில் இந்தக் கொடி ஏற்றும் நிகழ்வு அமையும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தருணத்தில் பிரதமர் அங்கு கூடியிருக்கும் மக்களிடையே உரையாற்றவும் உள்ளார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று அயோத்திக்குச் சென்று விழா ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டார். அயோத்தி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!