நாளை ராமநவமியன்று ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

பாம்பனில் ரயில் தூக்குப் பாலத்தில் அடிக்கடி ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினைகள் மற்றும் விரிசல் காரணமாக, பாலத்தின் அருகிலேயே புதிய ரயில் பாலத்திற்கு கடந்த 2019 மார்ச் 1ல் பிரதமர் மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
ரூ.535 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பாலத்தை நாளை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். ராமேசுவரம் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் செப்டம்பர் மாதத்துக்குள் முழுமையாக நிறைவடைந்து விடும். பாம்பன் பழைய ரயில் பாலத்தை அகற்றுவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது.
பாம்பன் ரயில் பாலத்தில் முதன்முதலில் 1914ஆம் ஆண்டு, பிப்ரவரி 24ம் தேதி ரயில் போக்குவரத்துத் தொடங்கியது. இந்தியாவில் கடலுக்குக் குறுக்கே கட்டப்பட்ட மிகப்பெரிய பாலம் என்ற வரலாற்று சிறப்புமிக்க பாம்பன் ரயில் தூக்குப்பாலத்தைக் கட்டுவதற்கான பணிகள் 1913ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டு அதே ஆண்டு டிசம்பர் மாதம் முழுமையாக முடிக்கப்பட்டது. ராமேஸ்வரம் தீவை இணைக்கும் வகையில் பாம்பன் கடலில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 2054 மீட்டர் நீளத்தில் 146 தூண்கள் கடலுக்குள் அமைக்கப்பட்டு 145 இரும்பு கிர்டர்கள் பொருத்தப்பட்டு ரயில் பாலம் அமைக்கப்பட்டது.
அதிக உயரம் கொண்ட படகுகள் மற்றும் கப்பல்கள் இந்த வழியாக செல்லும் விதமாக பாலத்தின் மேல்நோக்கி திறந்து மூடும் ‘ரோலிங் லிஃப்ட்’ தொழில்நுட்பம் இந்தப் பாலத்தில் வடிவமைக்கப்பட்டது. பாம்பன் ரயில் பாலத்தில் 1914ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதன் முதலாக ரயில் போக்குவரத்துத் தொடங்கியது. இது 1988ஆம் ஆண்டு பாம்பன் சாலை பாலம் கட்டும் வரை ராமேஸ்வரம் தீவுக்கும் மண்டபத்துக்கும் தனித்தன்மை வாய்ந்த முக்கிய போக்குவரத்து வழியாக இருந்தது.
1964-ல் தனுஷ் கோடியில் ஏற்பட்ட புயல் பாலத்தை புரட்டி போட்டதில் 124 தூண்கள் சேதமடைந்தன. தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத அந்தக் காலத்தில் மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் புகழ்பெற்ற பொறியாளர் ஸ்ரீதர் தலைமையிலான தொழிலாளர்கள் 67 நாட்களில் புதுப்பித்து மீண்டும் ரயில் போக்குவரத்தைத் துவக்கினர்.
கடந்த 2022 நவம்பர் 23ல் பாம்பன் தூக்கு பாலத்தின் தூண்கள் பலமிழந்தது. இதையடுத்து ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது பாம்பன் ரயில் பாலத்தை ஒட்டி 2.05 கி.மீ. தூரத்திற்கு நவீன புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்துத் துவங்கி 110 ஆண்டுகளாகிறது. கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் வழியாக ராமேஸ்வரத்திற்கு ரயிலில் செல்வது காலங்கள் கடந்தாலும் சிலிர்ப்பான அனுபவம் தான்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!