நாளை குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி... ரூ.82,500 கோடி திட்டப்பணிகள் தொடக்கம்!

 
பிரதமர் மோடி
நாளை மே 26ம் தேதி பிரதமர் மோடி குஜராத் செல்கிறார். குஜராத் மாநிலத்தில் ரூ.82,500 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளைத் தொடக்கி வைக்கிறார். குஜராத் மாநிலம் பூஜ் நகரில் ரூ.53,414 கோடி மதிப்பிலான 33 வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு நாளை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியும், திட்டங்களை தொடங்கியும் வைக்க உள்ளார். பிரதமர் மோடி குஜராத்துக்கு நாளை மே 26 மற்றும் மே 27 ஆகிய 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

பிரதமர் மோடியின் குஜராத் சுற்றுப்பயணம் குறித்து குஜராத் உள்துறை மந்திரி ஹர்ஷ் சாங்வி செய்தியாளர்களிடம் கூறுகையில், “காந்திநகரின் மகாத்மா மந்திரில் நகர்ப்புற வளர்ச்சி ஆண்டுக்கான நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார். பிரதமர் மோடியின் வருகையை குஜராத் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். அவரை வரவேற்கவும் தயாராக உள்ளனர்” என்றார். 

பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் வருகையை தொடர்ந்து, மொத்தம் ரூ.82,500 கோடிக்கும் கூடுதலான மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டவும் உள்ளார் என மந்திரி சாங்வி கூறியுள்ளார். அதன்படி பிரதமர் மோடி இந்த பயணத்தின் போது, முதல் நாளான நாளை 26ம் தேதி கச் மாவட்டத்துக்கு செல்கிறார். அதன் பின்னர் பூஜ் நகரில் உள்ள நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்கிறார்.

அவர் பூஜ் நகரில் ரூ.53,414 கோடி மதிப்பிலான 33 வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், திட்டங்களை தொடங்கியும் வைக்க உள்ளார். இதே போன்று, குஜராத் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் பயன் பெறும் வகையில், ஆஷாபுரா தம் ஆன்மிக மையத்தில் வளர்ச்சி பணிகளையும் தொடங்கி வைக்க உள்ளார் என அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

மோடி

கச் மாவட்டத்தில் அமைந்த இந்த ஆன்மிக மையத்தின் வளாகம், ரூ.32.71 கோடி மதிப்பில் புதுப்பிக்கும் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகளை மாநில அரசு மற்றும் குஜராத் பவித்ர யாத்ராதம் விகாஸ் வாரியம் இணைந்து மேற்கொண்டது. அந்த பணிகள் நிறைவடைந்து உள்ளன. இதனால், பக்தர்கள் கூடுதல் வசதியை பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?