"எம்.ஜி.ஆரின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கப் பாடுபடுவோம்” - பிரதமர் மோடி உறுதி!
பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுத் தனது மரியாதையைச் செலுத்தியுள்ளார்.
"தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு எம்.ஜி.ஆரின் பங்களிப்பு மகத்தானது" எனப் பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார். தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் உலகளவில் பிரபலப்படுத்துவதில் எம்.ஜி.ஆர் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்கது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமூக மேம்பாட்டிற்காக எம்.ஜி.ஆர் கொண்டிருந்த தொலைநோக்குப் பார்வையை நனவாக்கத் தனது அரசு எப்போதும் பாடுபடும் எனப் பிரதமர் உறுதி அளித்துள்ளார்.

எம்.ஜி.ஆர் மீது மோடியின் ஈர்ப்பு: பிரதமர் மோடி தனது உரைகளில் பலமுறை எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டத்தையும், ஏழை மக்களுக்கான நலத்திட்டங்களையும் முன்னுதாரணமாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் எம்.ஜி.ஆரின் ஆளுமையைக் குறித்துப் புகழ்ந்து பேசுவதை அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
கடந்த காலங்களில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மத்திய அரசு சார்பில் சிறப்பு அஞ்சல் தலை மற்றும் ரூ. 100 நினைவு நாணயம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 'பாரத ரத்னா' விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் புகழைத் தேசிய அளவில் கொண்டு செல்வதில் தற்போதைய மத்திய அரசும் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
