இன்று மத்திய பிரதேச மாநிலத்திற்கு செல்கிறார் பிரதமர் மோடி... குருஜி மகாராஜ் கோவிலில் பூஜை செய்து வழிபாடு!

 
பிரதமர் மோடி

இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மத்தியப்பிரதேச மாநிலம் அசோக் நகர் மாவட்டத்தில் இசாகார் தாலுகாவுக்கு உட்பட்ட ஆனந்த்பூர் கிராமத்தில் உள்ள ஆனந்த்பூர் தம் பகுதிக்கு செல்கிறார். இதன் பின்னர் இன்று பிற்பகல் 3.15 மணிக்கு  இசாகார் பகுதிக்கு உட்பட்ட குருஜி மகாராஜ் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டு பூஜைகள் செய்வார். அதன் பின்னர் பொது கூட்டம் ஒன்றிலும் கலந்து கொள்கிறார்.  

மோடி

ஆனந்த்பூர் தம், ஆன்மிகம் மற்றும் பரோபகார நோக்கங்களுக்காக நிறுவப்பட்டு உள்ளது. 500 பசுக்களுடன் நவீன கோசாலையை கொண்டு, 315 ஹெக்டேர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது. அறக்கட்டளையின் கீழ் வேளாண் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

மோடி

இந்த அறக்கட்டளையானது, நாடு முழுவதம் சத்சங் மையங்களையும், சுக்பூர் கிராமத்தில் மருத்துவமனையையும், சுக்பூர் மற்றும் ஆனந்த்பூர் பகுதிகளில் பள்ளிகளையும் நடத்தி வருகிறது.

இந்த ஆண்டில் மத்திய பிரதேசத்திற்கு பிரதமர் மோடி மேற்கொண்டு வரும்  2வது பயணம் இதுவாகும். இதற்கு முன்பாக கடந்த பிப்ரவரி 23ம் தேதி சத்தர்பூர் மாவட்டத்தில் பாகேஷ்வர் தம் பகுதிக்கு வருகை தந்த அவர், அடுத்த நாட்கள் தலைநகர் போபாலில் நடந்த உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை தொடங்கி வைத்து பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?