பாமக எம்.எல்.ஏ கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கம்... ராமதாஸ் அறிவிப்பு.!

 
பாமக


 
பாமக தலைவர் பதவிகுறித்து  ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நிலவி வருகிறது.  இதனால் அன்புமணி ஆதரவாளர்களை பதவிகளில் இருந்து ராமதாஸ் நீக்கி அதிர்ச்சி அளித்து வருகிறார். 

பாமக நிறுவனர் ராமதாஸ்
அந்த வகையில், இப்போது சேலம் மேற்கு மாவட்ட பாமக செயலாளராக இருந்த மேட்டூர் தொகுதி எம்எல்ஏ சதாசிவம், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உத்தரவின்படி அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். சதாசிவத்திற்கு பதிலாக ராஜேந்திரன் சேலம் மேற்கு மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  

அன்புமணி ராமதாஸ்
கட்சி நிர்வாகிகளை நியமிப்பது மற்றும் நீக்குவது குறித்து  இருவரும் தனித்தனியாக முடிவுகள் எடுத்து வருகின்றனர், இது கட்சிக்குள் உட்கட்சிப் பூசலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. முன்னதாக, சதாசிவம் இன்னும் ஒரு மாதத்தில் ராமதாசும்  அன்புமணியும் ஒன்றிணைவார்கள் எனக் கூறி, கட்சியில் உள்ள குழப்பம் தற்காலிகமானது என விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது