பாமக-வில் தந்தை vs மகன் போர்: "அன்புமணி ஒரு துரோகி" - ராமதாஸ் ஆவேசம்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அன்புமணி ராமதாஸ் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 48 மணி நேரத்திற்குள், பாமக நிறுவனர் ராமதாஸ் அதற்குத் தடை போட்டுள்ளார்.
"அன்புமணிக்குத் தலைமைப் பண்பு இல்லை. அவர் அதிமுகவுடன் பேசிய கூட்டணி ஒப்பந்தம் செல்லாது; அது ஒரு நீதிமன்ற அவமதிப்பு. நான் அமைப்பதே உண்மையான பாமக கூட்டணி" என ராமதாஸ் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். ஏற்கனவே 2025 செப்டம்பரில் கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக அன்புமணியைப் பாமகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியதாக ராமதாஸ் தெரிவித்தார். "அன்புமணி எனக்கே வேட்டு வைப்பார் என்று நினைக்கவில்லை. அவர் ஒரு களை (Weed), அதை பிடுங்கி எறிய வேண்டும்" எனச் சீறினார்.

டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி தான் மட்டுமே கட்சியின் நிறுவனத் தலைவர் என்றும், டிசம்பர் 17, 2025 முதல் பாமகவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அது தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ராமதாஸ் வாதிடுகிறார்.

எடப்பாடி பழனிசாமி இதுவரை தன்னுடன் கூட்டணி குறித்துப் பேசவில்லை என்றும், அன்புமணி போன்ற ஒரு தனி நபருடன் பேசிய பேச்சுவார்த்தைகள் தார்மீக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் செல்லாது என்றும் ராமதாஸ் கூறியுள்ளார். இதனால் அதிமுக - பாமக கூட்டணி தற்போதைய நிலையில் கேள்விக்குறியாகி உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
