அப்பா ஆசையாய் வாங்கித் தந்த குளிர்பானத்தில் விஷப்பூச்சி... அரண்டு போன சிறுமி... !

 
குளிர்பானத்தில் விஷ பூச்சி

உணவில் கலப்படங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. இதனால் உடல் நலக்குறைபாடு சில நேரங்களில் விபரீத நிகழ்வுகளும் நடந்தேறி விடுகின்றன. உணவு உற்பத்தி செய்பவர்களின் அலட்சிய போக்கே இதற்கு காரணம் என்ற பரவலான கருத்து நிலவி வருகிறது. கடலூர் மாவட்டம், சிதம்பரம்  கிள்ளை பகுதியில் வசித்து வருபவர்  ராமதாஸ்.  இவர் விசிக நகரச் செயலாளராக இருந்து வருகிறார்.  

குளிர்பானத்தில் விஷ பூச்சி

ராமதாஸ் இன்று காலை அதேப் பகுதியில் செயல்பட்டு வரும்   தனியார் பேக்கரியில் ஆப்பிள் ஜூஸ் வாங்கி தனது மகளுக்கு ஆசையாக குடிக்க கொடுத்தார்.  ஆனால் அதனை வாங்கி சிறுமி ஆசை ஆசையாக குடிக்க பார்த்தப்போது அதில்  விஷப் பூச்சி ஒன்று உயிரிழந்த நிலைய்லி  கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி உடனே தனது தந்தையிடம் காட்டியுள்ளார்.கடைக்காரர் முன்னிலையில்   ராமதாஸ் ஒரு பாத்திரத்தில் ஊற்றி பார்த்தபோது, ஜூஸ் பாட்டிலுக்குள் கருப்பு நிறத்தில் விஷப்பூச்சி இறந்தது  தெரியவந்தது.

குளிர்பானத்தில் விஷ பூச்சி

அந்த கடை உரிமையாளரிடம் இந்த விஷயம் குறித்து கேட்ட போது  ‘எங்கள் கடையில் இதுபோன்ற பொருட்களை விற்பனை செய்வது இல்லை’ என பட்டும்படாமல் கூறிவிட்டார்.  
இதுகுறித்து அப்பகுதி மக்கள்  ‘கிள்ளையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் பிச்சாவரம் உள்ளது. இந்த பகுதியை சுற்றிப்பார்க்க  ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.  இங்குள்ள கடைகளில் குளிர்பானம் மட்டும் இல்லாமல் பல்வேறு கெட்டுப்போன உணவுப் பொருட்களும் விற்பனை செய்யப்படுவதால் ஏதேனும் விபரீதம் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.    உடல்நலம் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதால்  உடனடியாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்  முறையாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!