தாய்-மகள் கொலை வழக்கில் குற்றவாளியை சுட்டு பிடித்த போலீசார்... தூத்துக்குடியில் பரபரப்பு!

 
முனீஸ்வரன்


தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே தாய்-மகள் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். 

குற்றவாளியை நெருங்கிய போலீசார், கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது குற்றவாளி தாக்கியதில் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் காயம் அடைந்தனர்.

தந்தையை கொலை செய்த மகன்!! திடுக்கிடும் பரபரப்பு வாக்குமூலம்!!

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகேயுள்ள மேலநம்பிபுரம் கிராமத்தில் தாய் - மகள் கொலைச் செய்து விட்டு நகைகளை  கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி முனீஸ்வரன் என்பவரை காவல்துறையினர் இடது காலில் சுட்டு பிடித்தனர். இதில் குளத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜ் மற்றும் காவலர் ஜாய்சன் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து குற்றவாளி முனீஸ்வரன் மற்றும் முனீஸ்வரன் தாக்குதலில் காயமடைந்த காவல் உதவியாளர் முத்துராஜ் மற்றும் காவலர் ஜாய்சன் ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விளாத்திகுளத்தில் மனைவி கொலை

இந்நிலையில் சிகிச்சை பெற்று வரும் காவல் உதவியாளர் முத்துராஜ் மற்றும் காவலர் ஜாய்சனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான் நேரில் சந்தித்து சம்பவம் குறித்து கேட்டறிந்துடன் காவலர்களின் துணிச்சலான சம்பவத்திற்கு பாராட்டு தெரிவித்ததுடன் ஆறுதல் கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web