வீட்டிலேயே 35 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்த போலி மருத்துவர்.. கையும் களவுமாக போலீசார் கைது..!!

 
ஜெயபாலன்

ஹோமியோபதி படித்து 35 ஆண்டுகளாக  மருத்துவம் படித்து வந்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.   

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த சுமதாங்கி கிராமத்தில் ஒருவர் மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக மாவட்ட இணை மருத்துவர் நிவேதிதாவுக்கு நேற்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வாலாஜா அரசு மருத்துவமனை மருத்துவர் தினேஷ்குமார், மருந்தாளுனர் வேலு, கிராம நிர்வாக அலுவலர் மஞ்சுளா, சப் இன்ஸ்பெக்டர் சௌந்தரராஜன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் நேற்று காவிரிப்பாக்கம் அடுத்த சுமதாங்கி கிராமத்துக்கு சென்றனர். பின்னர் அங்குள்ள தனியார் மருத்துவ மனையில் சோதனை நடத்தினர்.

நெமிலி: காவேரிப்பாக்கம் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகளை எஸ்பி  நேரில் ஆய்வு .|Inshorts

இதில் ஜெயபாலன் (70) என்பவருக்கு சொந்தமான கிளினிக் என்பதும், ஜெயபாலன் ஹோமியோபதி படித்துள்ளதோடு, வீட்டில் கிளினிக் நடத்தி ஆங்கில மருத்துவம் செய்து வருவதும் தெரியவந்தது. இந்த கிளினிக்கில் 35 ஆண்டுகளாக போலி மருந்து வழங்கி வருவது தெரியவந்தது. 2018-ம் ஆண்டு அளித்த புகாரின் அடிப்படையில் அவர் போலி மருத்துவர் என்று கைது செய்யப்பட்டதும் தெரியவந்தது.

ராணிப்பேட்டையில் வீட்டிலேயே மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது! |  Tamil News TN

இதையடுத்து கிளினிக்கில் இருந்த அனைத்து மருந்துகளையும் பறிமுதல் செய்த போலீசார், போலி டாக்டர் ஜெயபாலனை கைது செய்தனர். இதையடுத்து அந்த தனியார் மருத்துவ மனைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இது குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயபாலனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 35 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web