அதிர்ச்சி.. கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் சப்ளை.. பிரபல பெண் யூடியூபர் கைது!

 
சுவாதி கிருஷ்ணா

போதைப்பொருள் விற்பனை செய்து வந்த  பெண் யூடியூபரை போலீசார் கைது செய்தனர்...

கேரளாவில் எம்டிஎம்ஏ, எல்எஸ்டி ஸ்டாம்ப் உள்ளிட்ட சிந்தடிக் போதைப்பொருள் விற்பனை மிகவும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கல்லூரி மாணவ, மாணவிகள் தான் இதை பெருமளவு பயன்படுத்துகின்றனர். பெங்களூருவில் இருந்து தான் இந்த  போதைப்பொருள் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு வருகிறது.

Top 10 Most Dangerous Drugs | Delamere

இதைத் தடுக்க போலீஸார், போதைப் பொருள் தடுப்புத் துறை, கலால் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் எர்ணாகுளம் குன்னத்துநாடு பகுதியை சேர்ந்த சுவாதி கிருஷ்ணா (28) என்ற பெண் யூடியூபர் கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்வதாக சுங்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

Excise arrests female YouTuber in Ernakulam for drug peddling - KERALA -  CRIME | Kerala Kaumudi Online

அதன்பிறகு கடந்த சில மாதங்களாக அதிகாரிகள் அவரை ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நேற்று எர்ணாகுளம் காலடி பகுதியில் சுவாதி கிருஷ்ணாவை கலால் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அவரிடம் 3 கிராம் எம்.டி.எம்.ஏ மற்றும் 20 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போதைப்பொருள் துறையினர் போதைப்பொருளை பறிமுதல் செய்து சுவாதி கிருஷ்ணாவை கைது செய்து எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web