போலீஸ் பைக்கை திருடி மற்றொரு பைக்கை கொள்ளையடித்த கில்லாடி ஆசாமி!
கோவை ரத்தினபுரி காவல் நிலையத்திற்கு சொந்தமான ரோந்து பணிக்கான இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையத்தில் சாவியுடன் நிறுத்தப்பட்டிருந்த அந்த வாகனத்தை எடுத்துச் சென்ற அவர், பின்னர் அதே பைக்கில் சிவானந்தா காலனி பகுதியில் உள்ள ராதாகிருஷ்ணன் சாலைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

அங்கு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த தனியார் நிறுவன ஊழியரின் இருசக்கர வாகனத்தை திருடிய அந்த நபர், போலீஸ் பைக்கை சாவியுடன் அங்கேயே விட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார். மறுநாள் காலை தனது வாகனம் காணாமல் போனதை அறிந்த அந்த இளைஞர் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் அங்கு நின்ற வாகனம் காவல் துறையினரின் ரோந்து பைக் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் காவல் நிலையத்திலிருந்தே ரோந்து வாகனத்தை திருடிச் சென்று, பின்னர் மற்றொரு பைக்கை கொள்ளையடித்த மர்ம நபரின் செயல் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், உதவி ஆணையர் தலைமையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
