தலைநகரை நடுங்கச்செய்த இரட்டைக் கொலை... 13 பேரை தட்டித் தூக்கிய காவல்துறை தனிப்படை!

 
இரட்டைக் கொலை

தமிழகத்தின் தலைநகர் சென்னை கோட்டூர்புரத்தில்  இரட்டைக் கொலை சம்பவம் நடைபெற்று பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த  வழக்கில் 13 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  இவர்களிடம் ரகசிய இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
தொழில் போட்டி, முன் விரோதம்  காரணங்களால், ரவுடிகள் பழிதீர்க்கும் படலம் சென்னையில் தொடர்கிறது. கோட்டூர்புரம்,சித்ரா நகர், ‘யு பிளாக்’ குடியிருப்பில் வசித்தவர் அருண், 25; ரவுடி. இவர் மீது, கொலை உட்பட ஆறு வழக்குகள் உள்ளன. அவரது அண்ணன் அர்ஜுனன், 27. சகோதரர்கள் இருவரும்,நேற்று முன்தினம், கோட்டூர்புரத்தில், காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையைச் சேர்ந்த ரவுடி சுரேஷுடன் சேர்ந்து, மது அருந்தி உள்ளனர். அதன் பின்னர் இரவு, 9:30 மணிக்கு போதையில், மூவரும் உறங்கினர்.

போலீஸ்
இருசக்கர வாகனங்களில் வந்த 8 பேர் அரிவாளால் சராமாரியாக வெட்டி சாய்த்தனர். இவர்களின்   அலறல் கேட்டு எழுந்த அர்ஜுனன், சம்பவம் குறித்து   போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றனர். அங்கு சுரேஷ் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். உயிருக்கு போராடிய அருணை மீட்டு, ஆம்புலன்ஸ் வாயிலாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில், அருண் உயிரிழந்தார்.

போலீஸ்
இச்சம்பவம் குறித்து, கோட்டூர்புரம் போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  கொலைகள் நடந்த இடம் அருகே உள்ள, ‘சிசிடிவி’ காட்சிகளை ஆய்வு செய்தனர். 4 இரு சக்கர வாகனத்தில் எட்டு பேர் வந்து, அருண், சுரேஷ் ஆகியோரை கொலை செய்தது தெரியவந்தது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?