புத்தாண்டுக்கு முன் போலீஸ் அதிரடி… 1,300 பேர் கைது
2026 ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம் உலகம் முழுவதும் கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் குற்றங்களைத் தடுக்க காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. உள்ளூர் உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில், டெல்லி முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 1,306 பேர் கைது செய்யப்பட்டனர்.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்றங்கள் நடைபெறலாம் என்ற சந்தேகத்தில், ஆயுதச் சட்டம், கலால் சட்டம், என்டிபிஎஸ் மற்றும் சூதாட்டச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் 285 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதுடன், குற்றத்தில் ஈடுபட வாய்ப்புள்ளவர்கள் என கருதப்பட்ட 504 பேரும் பிடிபட்டனர். தொடர் குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கையில் 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சோதனையின் போது 21 நாட்டுத் துப்பாக்கிகள், 27 கத்திகள், தோட்டாக்கள், போதைப்பொருட்கள், மதுபானங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் திருடப்பட்ட 310 செல்போன்கள், 231 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனமும் மீட்கப்பட்டது. புத்தாண்டு கொண்டாட்டத்தில் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க ‘ஆகாத் 3.0’ திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
