சேலத்தில் விஜய் பிரச்சாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு1

 
விஜய்
 

கரூரில் நடைபெற்ற பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்துக்கு பின்னர், தற்காலிகமாக அனைத்து பொதுக்கூட்டங்களையும் நிறுத்தியிருந்த த.வெ.க. தலைவர் விஜய், சமீபத்தில் சென்னையில் நடந்த சிறப்பு பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் மீண்டும் முழுவீச்சில் அரசியல் பயணத்தைத் தொடங்குவதாக அறிவித்தார். அந்த கூட்டத்தில், தி.மு.க. மீது கடும் விமர்சனமும் முன்வைத்த அவர், மீண்டும் பிரசாரத்தை தொடங்க மாவட்ட செயலாளர்கள் கேட்ட கோரிக்கையையும் ஏற்றுக்கொண்டதாகத் தகவல் வெளியாகியது.

இதனையடுத்து, சேலத்தை முதற்கட்டமாகக் கொண்டு பிரசாரம் மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்ட நிலையில், அடுத்த மாதம் 4 ஆம் தேதி விஜய் பிரசாரம் நடத்த அனுமதி கேட்டு தவெக நிர்வாகிகள் காவல் ஆணையரிடம் மனு அளித்தனர். போஸ் மைதானம், கோட்டை மைதானம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டி உள்ளிட்ட இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டிருந்தது. இதற்காக கட்சி நிர்வாகிகள் பல்வேறு ஏற்பாடுகளிலும் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால், கார்த்திகை தீபத்தையொட்டி நகரம் முழுவதும் காவல்துறை பாதுகாப்பு பணிகள் தீவிரமாக இருக்கும் நிலையில், டிசம்பர் 4 ஆம் தேதி பாதுகாப்பு பணி வழங்க இயலாது என்பதால் அனுமதி மறுக்கப்பட்டதாக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் தெரிவித்தார். அதேசமயம், 4 ஆம் தேதியைத் தவிர்த்து பிற தேதிகளில் பிரசார அனுமதி வழங்க தயாராக இருப்பதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!