வாரத்துக்கு 2 நாள் சிக்கன்.. ஜெயில் சாப்பாடு நல்லாயிருக்கும்? வெடிகுண்டு மிரட்டல் விடுத்து போலீசாரிடம் சிக்கிய இளைஞர்!

 
சந்தோஷ் குமார்

சென்னையில் போலீசார் கடமையை செய்துக் கொண்டிருக்கும் போது, காவல் துறையினரின் காவல் கட்டுப்பாட்டு அறையை தெடர்பு கொண்டு மர்ம நபர் ஒருவர் பேசியுள்ளார். அப்போது, ஈரோடு ரயில் நிலையம் மற்றும் ஈரோடு பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறி பரப்பரப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து பேசிய அந்நபர், வெடிகுண்டு சற்று நேரத்தில் வெடிக்க உள்ளதாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார். 

இந்த சம்பவம் குறித்து உடனடியாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஈரோடு காவல்துறை துணை கண்காணிப்பார் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக களத்தில் இறங்கிய ஈரோடு போலீசார் ஈரோடு ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஈரோடு ரயில்வே காவல் துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதோடு வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல் துறையினரும் ரயில் நிலையத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். அதுமட்டுமல்லாமல் அவர்களுடன் மோப்ப நாய் கயலும் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சந்தோஷ் குமார்

ஈரோடு மணிப்பூண்டு பகுதிகளிலும் ஒவ்வொரு பகுதியாக சென்ற சோதனை நடத்தப்பட்டது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடந்த சோதனையில் மர்ம பொருள் எதுவும் கிடைக்கவில்லை. அப்போதுதான் காவல் துறையினருக்கு வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தால் ஈரோடு மாநகர் முழுவதும் நேற்று காலை பரபரப்பாக காணப்பட்டது. 

இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை பிடிக்க போலீசார் களமிறங்கினர். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் நம்பரை வைத்து அந்த நபர் இருக்கும் பகுதியை காவல் துறையினர் ட்ராக் செய்தனர். 

அப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் (34) என்பது தெரிய வந்தது. ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் அவர் சுற்றி திரிவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்று சந்தோஷ் குமாரை காவல் துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.

விசாரணையில் சந்தோஷ் குமார் எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் சுற்றி திரிந்துள்ளார். அவரது நடவடிக்கை பிடிக்காமல் முதல் மனைவி மற்றும் இரண்டாம் மனைவி இருவருமே இவரை விட்டு பிரிந்து சென்று விட்டதாகவும், அவ்வப்போது அவருக்கு கிடைக்கும் வேலையை செய்து சுற்றி வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

சந்தோஷ் குமார்

மேலும் அவர் தற்போது வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது போலவே ஏற்கனவே 2019ம் ஆண்டு மற்றும் 2021ம் ஆண்டு என இரண்டு முறை சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு சற்று நேரத்தில் வெடிக்கும் எனவும் பதற்றத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஏன் இவ்வாறு செய்தார் என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட போது, வீட்டில் சாப்பாடு சரியில்லை எனவும் ஜெயில் சாப்பாடு நன்றாக இருக்கும் என்பதால் இவ்வாறு போன் செய்து மிரட்டல் விடுத்ததாக அலட்சியமாக பதில் கூறியுள்ளார்.

அவர் இவ்வாறு கூறியதை கேட்டு கோபமடைந்த போலீசார் உடனடியாக சிறையில் அடைத்தனர். அவர் மீது கொலை மிரட்டல் விடுத்தது மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டது என இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web