தலைக்கேறிய போதை.. கோவில் விழாவில் குத்தாட்டம் போட்ட எஸ்ஐ .. வைரலாகும் வீடியோ!

 
ஷாஜி

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சாந்தன்பாறை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஷாஜி என்பவர் உள்ளார். இவரது தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் உள்ள ஒரு கோவில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருவிழாவில் தமிழ் அம்மன் பக்தி பாடலான  “மாரியம்மா ... மாரியம்மா ...” ஒலிக்கப்பட்டது.

அந்நேரம்  சீருடையில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ஷாஜி, பக்தி பரவசத்தில் அந்த பாடலுக்கு ஏற்ப கோவிலில் சாமியாட்டம் ஆடினார். இதனை சிறிதும் எதிர்பாராத சக காவலர்கள், அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். திருவிழாவிற்கு திரண்ட பக்தர்கள் இதனை பார்த்து ரசித்து தாளம் போட்டனர்.

இதனை யாரோ ஒருவர் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி உள்ளார். பின்னர் அங்கிருந்தவர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர் ஷாஜியை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இந்த வீடியோ வைரலாக பரவியதை தொடர்ந்து முன்னாள் DSP தலைமையில் நடத்திய விசாரணையில் உதவி ஆய்வாளர் பணி நேரத்தில் மது அருந்தி விட்டு குடி போதையில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு மறந்து சாமி ஆட்டம் போட்டது தெரிய வந்தது.

ஷாஜி

இதனை தொடர்ந்து ஷாஜி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். போலீஸ் சீருடையில் உதவி ஆய்வாளர் சாமி ஆடிய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web