ரோந்து சென்ற போலீசாரை குறிவைத்து துப்பாக்கிச்சூடு… சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேர் பலி!

 
துப்பாக்கி

பாகிஸ்தானில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் டேரா இஸ்மாயில் கான் பகுதியில் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென ஆயுததாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். எதிர்பாராத இந்த தாக்குதலில் போலீசார் பதிலடி கொடுக்க முயன்றாலும் சூழ்நிலை கட்டுக்குள் வரவில்லை.

இந்த துப்பாக்கிச்சூட்டில் சப்-இன்ஸ்பெக்டர் உட்பட மொத்தம் 4 போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதல் நடத்தியவர்கள் சம்பவத்திற்குப் பிறகு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

சம்பவத்துக்குப் பிறகு அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகளை பிடிக்க விரிவான தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. சமீப காலமாக அதிகரித்து வரும் தாக்குதல்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!