தக்காளிக்கு போலீஸ் பாதுகாப்பு!! பொதுமக்கள் அள்ளி செல்லாமல் தடுக்க புதிய ஏற்பாடு!!

 
தக்காளி


இந்தியா முழுவதும் தொடர் மழை, விளைச்சல் மற்றும் வரத்து குறைப்பு காரணமாக தக்காளி விலை உச்சம் தொட்டுள்ளது. ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ120 முதல் 160 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் டெல்லியில்  தக்காளி வியாபாரிகள் தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்து அம்மாநிலத்தில்  விற்பனை செய்து வருகின்றனர்.

சாலையில் கவிழ்ந்த தக்காளி

அந்த வகையில்  கர்நாடக மாநிலம் கோலாரில் இருந்து 638 பெட்டிகளில் 16 டன் எடையுள்ள தக்காளியை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று டெல்லியை நோக்கி புறப்பட்டது. தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டம் மாவாள மண்டல் ஐதராபாத், நாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்று கொண்டிருந்த போது  லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால்  லாரி சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்தது.  இந்த விபத்தில் லாரியில் இருந்த தக்காளி பெட்டிகள் சாலையில் விழுந்தன. இதனைக் கண்ட அந்த பகுதி பொதுமக்கள்  தக்காளிகளை அள்ளிச் செல்ல முயன்றனர். இந்த விபத்து குறித்து காவல்துறை அதிகாரி  தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசார் துப்பாக்கியுடன் அங்கு வந்தனர். லாரியை சுற்றி நின்று தக்காளியை பொதுமக்கள் எடுத்துச் செல்லாதபடிக்கு  மாலை வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சாலையில் கவிழ்ந்த தக்காளி

சிறிது நேரத்தில் மாற்று லாரி கொண்டு வரப்பட்டு தக்காளிப் பெட்டிகளை அதில் ஏற்றி பத்திரமாக டெல்லிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறை விடுத்த செய்திக்குறிப்பில் டெல்லியில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ 150 வரை விற்பனை செய்யப்படுகிறது. லாரியில் கொண்டுவரப்பட்ட 16 டன் தக்காளி விலை ரூ.22 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு மேலும் சில வாரங்கள் நீடிக்கலாம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தக்காளியை பொதுமக்கள் எடுத்துச் செல்லாதவாறு பாதுகாப்பு அளிக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பேசுபொருளாக இருந்தது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web