போலீசார் அதிர்ச்சி... கொள்ளையர்களுக்கு திருட்டு தொழிலில் ஈடுபட சிறப்பு வகுப்புகள்... விசாரணையில் புதிய தகவல்கள்!

 
போலீசார் அதிர்ச்சி... கொள்ளையர்களுக்கு திருட்டு தொழிலில் ஈடுபட சிறப்பு வகுப்புகள்... விசாரணையில் புதிய தகவல்கள்!

சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட இரானிய கொள்ளையர்களில் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், போலீசாரின் விசாரணையில் அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள் வெளியாகி உள்ளது. 

சென்னையில் ஒரே நேரத்தில் 6 இடங்களில் தங்கச் சங்கிலி வழிப்பறியில் ஈடுபட்ட இரானிய கும்பலைச் சேர்ந்த 3 பேரை சென்னை மாநகர காவல்துறை கைது செய்துள்ளது. 50க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல மகாராஷ்டிரா கொள்ளையன் ஜாபர் குலாம் உசேன் இரானியை சென்னையில் நேற்று போலீசார் என்கவுன்டர் மூலம் சுட்டுக் கொன்றனர். 

போலீசார் அதிர்ச்சி... கொள்ளையர்களுக்கு திருட்டு தொழிலில் ஈடுபட சிறப்பு வகுப்புகள்... விசாரணையில் புதிய தகவல்கள்!

இந்நிலையில் குற்றவாளிகள் சல்மான் உசேன் இரானி, அம்ஜத் மீசமின் ஆகிய இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகையில், புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

தனியாக நடந்து செல்லும் பெண்கள், மூதாட்டிகளை குறி வைத்து செயின் பறிப்பதை இரானி கொள்ளையர்களின் பிரதான தொழிலாக கொண்டுள்ளனர்.  அதே சமயம் தங்கக் கடத்தல்காரர்களை மடக்கி போலீஸ் எனக்கூறி வழிப்பறி செய்வதையும் வாடிக்கையாக வைத்திருந்துள்ளனர். 

சொந்த மாநிலத்தில் போலீசாரிடம் சிக்கிய நிலையில், திருட்டு தொழிலை விட்டுவிட்டதாக சொந்த மாநில போசாரை நம்ப வைக்க சல்மான்,சிறிது காலம் கூலிங் கிளாஸ் வியாபாரம் செய்து வந்துள்ளார். லிங் கிளாஸ் வியாபாரம் செய்யும்போது திடீரென சல்மான் மாயமாகி, எப்போதும் போல பெருநகரங்களுக்கு சென்று தங்கள் கூட்டாளிகளுடன் கைவரிசை காட்டி வந்துள்ளார்.

இந்த கொள்ளை கும்பலுக்கு இந்தி, அரபி, உருது, பார்சி ஆகிய 4 மொழிகளும் அத்துப்படி. இப்படி வெளிமாநிலங்களில் வழிப்பறி செய்துவிட்டு சொந்த ஊரான அம்பிவெளி, பிதருக்கு சென்று விட்டால் நகைகளை பறிமுதல் செய்வது கடினம் என்பது கொள்ளையர்களின் எண்ணமாக இருந்துள்ளது. 

போலீசார் அதிர்ச்சி... கொள்ளையர்களுக்கு திருட்டு தொழிலில் ஈடுபட சிறப்பு வகுப்புகள்... விசாரணையில் புதிய தகவல்கள்!

கொள்ளையர்கள் தங்கியிருக்கும் பகுதிக்குள் நுழைந்தாலும் அவர்களை போலீசாரால் கைது செய்ய முடியாது. பெண்களிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக வழக்கறிஞர்களை வைத்து புகார் செய்து போலீசாருக்கே நெருக்கடி தருவதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளனர். மேலும் கொள்ளை சம்பவங்களை அரங்கேற்ற அனைவருக்கும் தலைமை பண்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது என்று கூறி போலீசாரை அதிர வைத்துள்ளனர்.

போலீசிடம் சிக்கினால் மற்றவர்களை காட்டிக் கொடுக்காமல் இருப்பது எப்படி? என்று தனியே பாடம் எடுக்கப்படுகிறது. திருட்டு தொழிலில் ஈடுபட கொள்ளையர்களுக்கு சிறப்பு வகுப்புகள், செயல் விளக்கம் அளிக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?