ரௌடி தப்ப முயற்சித்த போது சுட்டுப் பிடித்த போலீஸ்!
திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் ராஜசேகர் (31). இவர் ஒரு பிரபல கொள்ளையன் ஆவார். இவரை திருச்சி அருகே போலீசார் சுட்டுப் பிடித்தனர். கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் இவர் மீது குற்ற வழக்கு உள்ளது. அதனால் போலீசார் இவரைத் தேடி வந்தனர்.

திருச்சி எடமலைப்புதூர் அருகே ராமச்சந்திரா நகரில் ராஜசேகர் பதுங்கி இருந்தார். ரகசியத் தகவல் அறிந்து போலீசார் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர். உதவி ஆய்வாளர் பாஸ்கர் தலைமையிலான குழு ராஜசேகரைப் பிடிக்கச் சென்றது.

போலீசாரைக் கண்டதும் ராஜசேகர் அதிர்ச்சி அடைந்தார். அவர் தப்பி ஓட முயன்றார். அப்போது அவர் உதவி ஆய்வாளர் பாஸ்கரைக் கத்தியால் சரமாரியாகத் தாக்கினார். போலீசார் தற்காப்பிற்காக ராஜசேகரைச் சுட்டுப் பிடித்தனர். காலில் காயம் அடைந்த ராஜசேகர் கைது செய்யப்பட்டார். காயம் அடைந்த உதவி ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் கொள்ளையன் ராஜசேகர் இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
