கலவரத்தில் வீசிய செங்கற்களை பயன்படுத்தி கட்டப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்!

 
செங்கற்கள்

 உத்தரப்பிரதேச மாநிலத்தில் சம்பல் நகரில் 2024 ல் ஏற்பட்ட கலவரம் பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. பழமையான ஷாஹி ஜமா மசூதியில் அதிகாரிகள் ஆய்வுக்காக நவம்பர் 24ம் தேதி மக்களிடையே மோதல் ஏற்பட்டது.இது விரைவில் கலவரமாக மாறியதில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30 போலீசாருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அந்தப் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் புதிய புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது.இந்த புதிய புறக்காவல் நிலையம், 100 நாட்களில் விரைவாக கட்டப்பட்டது. குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில்  கலவரக்காரர்கள் போலீசாரை தாக்க பயன்படுத்திய செங்கற்கள் இந்தக் கட்டிடத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  

செங்கற்கள்

இது கலவரத்தின் நினைவாகவும், அதனை எதிர்த்து பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையாகவும் கருதப்படுகிறது. காவல் கண்காணிப்பாளர் கிரிஷன் குமார் பிஷ்னோய், “இது மாவட்டத்தின் முதல் உயர் தொழில்நுட்ப புறக்காவல் நிலையமாகும். சம்பல் மாவட்ட ஆட்சியர் ராஜேந்தர் பென்சியா, “நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த புறக்காவல் நிலையம் அனைத்து மத மக்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதே நோக்கம். 

செங்கற்கள்

இதில் கண்காணிப்பு கோபுரம், பாதுகாப்பு சிசிடிவி கட்டுப்பாட்டு அறை போன்ற வசதிகள் உள்ளன” என தெரிவித்துள்ளார்.  இதேவேளை, காக்கு சராயில் உள்ள ஒரு பழமையான கோயில், 46 ஆண்டுகளுக்குப் பிறகு ராம நவமி தினத்தில்  மீண்டும் திறக்கப்பட்டதும் நகரத்தின் மற்றொரு முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web