சீமானுக்கு போலீசார் சம்மன்... பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு புகார்!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து பேசிய கருத்துக்களால் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். சீமான் அவதூறாக பேசியதாக பதியப்பட்ட வழக்கில், விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராக வேண்டும் என சீமானுக்கு ராணிப்பேட்டை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர் சந்திப்பில் பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இது குறித்து பெரியார் அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் திமுக சார்பில் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சீமானின் இந்த பேச்சுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!