ஹதி கொலை… வங்கதேசத்தில் மீண்டும் எரியும் அரசியல் தீ!
மாணவர் அமைப்பான இன்கிலாப் மஞ்சாவின் தலைவர் ஷரீஃப் ஒஸ்மான் ஹதி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வங்கதேசம் முழுவதும் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. டிசம்பர் 18 இரவு முதல் போராட்டங்கள் தீவிரமடைந்து, தாக்குதல்கள் மற்றும் கலவரங்களாக மாறின. இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் ஹதியின் மரணத்தை உறுதிப்படுத்தியதும், பதற்றம் உச்சத்தைத் தொட்டது. ஹதியின் உடல் சிங்கப்பூரில் இருந்து இன்று நாட்டுக்குக் கொண்டு வரப்பட உள்ளது.
டாக்காவில் தேர்தல் பிரச்சாரம் தொடங்கியபோது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் ஹதியை சுட்டுக் கொன்றனர். வரும் பொதுத் தேர்தலில் அவர் வேட்பாளராக இருந்தது அரசியல் சூழலை மேலும் சிக்கலாக்கியது. இதனைத் தொடர்ந்து, முன்னாள் அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் இல்லம், அவாமி லீக் அலுவலகங்கள் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன. வாகனங்கள், கடைகள் சேதமடைந்தன. முக்கிய ஊடக அலுவலகங்களும் தாக்குதலுக்கு உள்ளானது.

இந்த கலவரங்கள் நாடு முழுவதும் பரவியதால் பாதுகாப்புப் படைகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்திய எதிர்ப்பு கோஷங்களும் எழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஹதியின் கொலை அரசியல் கொலையாகவே பார்க்கப்படுகிறது. ஷேக் ஹசினா ஆட்சி முடிந்த பிறகு அமைதி திரும்பும் என நம்பிய நிலையில், வங்கதேசம் மீண்டும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. நிலைமை எப்போது சீராகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
