இன்று வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்... துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு!
செஞ்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை, டிசம்பர் 5) செஞ்சியில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு முக்கிய ஆலோசனைகளை வழங்கவுள்ளார்.

தலைமை: உழவர் நலன் மற்றும் வேளாண் துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.
நேரம்: இன்று மாலை 3 மணிக்கு.
இடம்: செஞ்சி-திண்டிவனம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம்.

இந்தக் கூட்டத்தில் திமுகவின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து அணி அமைப்பாளர்கள் மற்றும் உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்க உள்ளனர்.
துணை முதல்வருக்கு செஞ்சி பயணியர் விடுதி அருகில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
