புகையில்லா போகி பண்டிகை கொண்டாட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல்!

 
போகி  மாசுக்கட்டுப்பாடு மாசு

தமிழர்களின் பாரம்பரியப் பண்டிகையான பொங்கல் திருநாளை முன்னிட்டு, வரும் போகிப் பண்டிகையைச் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் 'புகையில்லா போகி'யாகக் கொண்டாடுமாறு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளது. "பழையன கழிதலும், புதியன புகுதலும்" என்ற அடிப்படையில் கொண்டாடப்படும் போகிப் பண்டிகையின் போது, தேவையற்ற பொருட்களை எரிப்பது வழக்கம். ஆனால், நவீன காலத்தில் பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொருட்களை எரிப்பது கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் செயற்கை இழை துணிகள், பழைய டயர் மற்றும் டியூப்கள், ரசாயனம் கலந்த பொருட்கள் மற்றும் காகிதங்கள்  ஆகிய பொருட்களைத் தீயிட்டுக் கொளுத்த வேண்டாம் என வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

போகி

இவற்றிலிருந்து வெளிவரும் நச்சுப் புகையால் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் மற்றும் நுரையீரல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அடர்ந்த புகையினால் சாலைகளில் வாகன ஓட்டிகளுக்குக் கண்மறைப்பு ஏற்பட்டு விபத்துகள் நிகழ்கின்றன.

போகி

சென்னையில் போகி அன்று அதிகாலை ஏற்படும் புகை மூட்டத்தால், விமானங்கள் தரை இறங்குவதிலும், புறப்படுவதிலும் கடும் தாமதம் ஏற்படுகிறது. சென்னை மாநகரின் 15 இடங்களில் ஜனவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் 24 மணி நேரமும் காற்றின் தரம் கண்காணிக்கப்பட்டு, அதன் முடிவுகள் வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும். கடந்த 21 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த விழிப்புணர்வுப் பிரசாரம், இந்த 2026-ஆம் ஆண்டும் அனைத்து மாவட்டங்களிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!