பொங்கலுக்கு சர்ப்ரைஸ்… ரூ.3,000 ரொக்கப் பரிசு அறிவிப்பு!

 
பொங்கல்

 

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் பரிசு குறித்து பொதுமக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்தனர். கடந்த ஆண்டு ரொக்கப் பணம் வழங்கப்படாததால், இந்த ஆண்டு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் 2026 பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு ரூ.248 கோடி நிதி ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

பொங்கல்

இதனைத் தொடர்ந்து, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்கப்படுமா என்ற விவகாரம் அரசியல் மற்றும் மக்கள் மத்தியில் பேசுபொருளானது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையின் முடிவில் ரூ.3,000 ரொக்கப் பணம் வழங்க முடிவு செய்யப்பட்டது.

பொங்கல்

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் ரூ.3,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும். பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே ரொக்கப் பரிசு, பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் வேட்டி சேலைகள் நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!