பொங்கலுக்கு ரூ5000 ரொக்கப்பரிசு? எகிறும் எதிர்பார்ப்பு...!

 
பொங்கல்
 

தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மீண்டும் சூடுபிடித்துள்ளது. 2021-ல் ரூ.2,500, அதன் பின் திமுக ஆட்சியில் ரூ.1,000 வழங்கப்பட்ட நிலையில், 2025-ல் பணம் இல்லாதது மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. 2026 சட்டசபைத் தேர்தல் நெருங்குவதால், இந்த ஆண்டு பொங்கலுக்கு பணம் சேருமா என்ற கேள்வி பரவலாக பேசப்படுகிறது.

பொங்கல்

இந்த விவகாரம் குறித்து இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. உணவுத் துறை, கூட்டுறவுத் துறை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்க உள்ளனர். பொங்கல் பரிசுத் தொகுப்பில் இடம் பெறும் பொருட்கள், மொத்த செலவு மற்றும் ரொக்கப் பணத்தின் அளவு குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பு

பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு கரும்பு இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை பணம் வழங்கப்படலாம் என்ற ஊகங்களும் அரசியல் வட்டாரங்களில் பரவி வருகின்றன. 1.10 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு ஜனவரி முதல் வாரத்தில் டோக்கன் வழங்கி, அதன் பின் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!