பொங்கல் கொண்டாட்டம்...எகிறியது பூக்களின் விலை.. மல்லிக்கைப்பூ கிலோ ரூ.7,000க்கு விற்பனை!

 
மல்லிக்கைப்பூ மல்லி மலர் சந்தை

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டங்கள் இப்போதே களைக்கட்ட துவங்கியுள்ள நிலையில், பனி  காரணமாக பூக்கள் வரத்து குறைந்துள்ளதாலும், பண்டிகை சீசன் என்பதாலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பூக்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதில் மல்லிகை பூ விலை ராக்கெட் வேகத்தில் ஏறியுள்ளது. பூ சந்தைகளில் வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மல்லிகை

மதுரை திருமங்கலம் பூ மார்க்கெட்டில் இன்று மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.7,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சமீப நாட்களாக விலை தினமும் உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். பண்டிகை தேவையும் அதிகரித்துள்ளது.

மல்லிகைப்பூ மல்லிகை பூ

பனிப்பொழிவு காரணமாக பூ உற்பத்தி குறைந்துள்ளதுடன், வரத்து சரிந்ததே விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. வரும் நாட்களில் மேலும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!