பொங்கல் வேஷ்டி,சேலைக்கு பதில் ரூ1000/- ரொக்கப்பணம்... அரசு அதிரடி அறிவிப்பு!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச வேஷ்டி, சேலை திட்டத்தை நிறுத்தி, அதற்கு பதிலாக நேரடி பண பரிமாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது. இன்று முதல் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் ரூ.500 முதல் ரூ.1000 வரை பணம் வரவு வைக்கப்படுகிறது. ஒற்றை உறுப்பினர் கொண்ட குடும்பங்களுக்கு ரூ.500, இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ள குடும்பங்களுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது.

இந்த தொகை ரேஷன் கடைகள் மூலம் அல்லாமல் நேரடியாக வங்கி கணக்குகளில் செலுத்தப்படும். வங்கி கணக்கு உள்ள குடும்பத்தின் பெண் உறுப்பினரின் கணக்கிலேயே பணம் வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் சுமார் 1.30 லட்சம் குடும்பங்கள் பயனடைவார்கள் என்றும், ரூ.12.13 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன், பொங்கல் பண்டிகைக்கான பொருட்களாக 4 கிலோ அரிசி, சர்க்கரை, பருப்பு, 300 கிராம் நெய் மற்றும் 1 லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் வழங்கப்படுகிறது. ஜனவரி 3 முதல் இந்த விநியோகம் தொடங்கியுள்ளது. பணம் உடனடியாக கிடைக்க, ஆதார் மற்றும் வங்கி விவரங்களை சரியாக இணைத்து வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
